புத்தரின் பற் கோயில் (tooth temple ) - tamilaaa 360

jio

புத்தரின் பற் கோயில் (tooth temple )



ஸ்ரீலங்காவில் மிக அழகான நகர் கண்டி கொழும்பு நகரிலிருந்து வடகிழக்கில் 120 கி.மீ. தொலைவில்| கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்திலுள்ளது இது. 1371 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தோட்டம் ஆசியாவிலேயே மிக அழகான தோட்டம் என்று கருதப்படுகிறது. 150 ஏக்கர் பரப்பளவுடையது இத் தோட்டம். இதன் மூன்று புறங்களிலும் மகாவெல் கங்கா எனும் ஆறு அணைத்துக்கொண்டு செல்லுகிறது.

இங்கு ஒரு புத்தர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தலாடா மாலிகவா என்று பெயர். இதன் பொருள் 'பற் கோயில்'.  கண்டியைச் சுற்றி அமைந்துள்ள பல வரலாற்றுச் சின்னங்களில் மிகக் கவர்ச்சியானது இது. எண் கோண வடிவில் அமைந்துள்ளது இக்கோயில், புத்தரின் புனித பல்லிற்காகக் கட்டப்பட்ட இது புத்த மதத்தினரின் புனித ஸ்தலம்.

இலங்கை மன்னன் இரண்டாம் விமலதர்ம சூரியா என்பவனால் மிகுந்த பொருள் செலவில் கட்டப்பட்டது. 1765 ஆம் ஆண்டு டச்சு படையெடுப்பின்போது இக்கோயில் அடியோடு அழிக்கப்பட்டது. அந்தப் படையெடுப்பின்போது புத்தரின் பல் காவுள் கமா குகையில் ஒளித்து வைக்கப்பட்டது. சில வருடங்களுக்கு பின் கீர்த்தி ஸ்ரீ ராஜ சின்காவினால் இக்கோயில் மீண்டும் புதிதாக கட்டப்பட்டது. அப்போது அந்தப் பல் இங்கு மறுபடியும் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

இக்கோயிலிலுள்ள செதுக்குருச் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இங்குள்ள புத்தர் சிலைகளும் வண்ணச் சுவரோவியங்களும் வார்த்தைகளால் வருணிக்க முடியாத அழகுடையவை. புத்தரின் புனிதப் பல் இருக்கும் இடத்திற்குச் செல்லும் நுழைவு வாயிலிலுள்ள கதவுகள் அற்புதமான செதுக்கு வேலைகள் செய்யப்பட்டு தந்தத்தினாலும் வெள்ளியினாலும் பொதிய பட்டுள்ளன. அதன் இரு புறங்களிலும் இரண்டு கோடி யானை தந்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. புனிதப் பல் வைத்துள்ள இடம் ஆலயமணி போன்ற வடிவுடையது. முழுவதும் வெள்ளியினால் செய்யப்பட்டு பொன்முலாம் பூசப்பட்டது.

1 கருத்து: