மாலி குறுமணல் பள்ளிவாசல் !!!!!. - tamilaaa 360

jio

மாலி குறுமணல் பள்ளிவாசல் !!!!!.

மாலி மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு குடியரசு. இதன் வரலாறு கானா சாம்ராஜ்ஜியம் என்ற பெயருடன் தொடங்குகிறது. பதினோராம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கானா சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்து மாலி சாம்ராஜ்ஜியம் என்று புத்துயிர் பெற்று எழுகிறது. 13, 14 ஆம் நூற்றாண்டுகள் இந்த சாம்ராஜ்ஜியத்தின் உச்ச கட்டம்.

 அப்போது முக்கிய வர்த்தக கேந்திர மான டிம்பக்டு உட்பட மத்திய நைகர் பள்ளத்தாக்கு முழுவதும் இதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பின்னர் இது சிதறியது. இறுதியில் ஃபிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்து 1960 ஆம் ஆண்டு விடுதலைப் பெற்றது. இங்குள்ளவர்கள் இஸ்லாமியர்கள்.

மாலி சாம்ராஜ்ஜியம் அன்றைய புகழ்பெற்ற ஆப்பிரிக்க சாம்ராஜ்ஜியங்களில் ஒன்று. ஜென்னி எனுமிடம் அப்போது முக்கிய வர்த்தக கலாசார மையமாக இருந்தது. இங்குள்ள மூர் கட்டட அமைப்பும் மசூதியும் உலகின் கவனத்தைக் கவர்ந்தவை.

இங்கு ஒரு கோட்டை போல மிகப் பெரிய பள்ளிவாசல் உள்ளது. மாட மாளிகைபோல் பல அடுக்குகளுடன் அமைந்தது இந்த பள்ளிவாசல். சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் அதாவது மாலி சாம்ராஜ்ஜியம் உச்ச கட்டத்திலிருக்கும்போது கட்டப்பட்டது. மூர் காலப்பாணியில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் முழுக்க முழுக்க மண்ணாலானது.

இதிலென்ன ஆச்சரியம்?இங்கு கட்டபொம்மன் கோட்டைகூட மண்ணால்தானே கட்டப்பட்டது என்று கேட்கலாம். கட்டபொம்மன் கோட்டை கட்டபயன்படுத்தப்பட்ட மண் களிமண் ஆகும்.

ஆனால் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்ட மண் பாலைவனக் குறுமணல் ஆகும். மாலி நாட்டின் வட பகுதி சஹாரா பாலைவனத்திலேயே வருகிறது. எனவே அங்கு மிகுதியாகக் கிடைத்த குறுமணல்களைக் கொண்டே இது கட்டப்பட்டது. மணலில் அமைந்த இந்தப் பள்ளி வாசல் இன்றுவரை எந்தவித சேதமுமில்லாமல் இருப்பது பெரு வியப்பையும் தருகிறது. விந்தையாகவும் உள்ளது.

கருத்துகள் இல்லை