அமெரிக்காவின் சிறந்த கட்டட கலை பெண்டகன் !!!!!
பெண்டகன் அமெரிக்காவின் தரைப்படை, விமானப்படை, கப்பல் படை ஆகிய முப்படைகளின் தலைமையகம். பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகமும் கூட வர்ஜீனியாவில் ஆர்லிங்டன் நகரில் பொட்டாமாக் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்ட அலுவலக வளாகம். உலகிலேயே மிகப் பெரிய அலுவலகக் கட்டடம் இதுதான்.
இதன் கட்டடப் பரப்பளவு மட்டும் 12 ஹெக்டேர்கள் (29 ஏக்கர்). நடுவிலுள்ள முற்றம் 2 ஹெக்டேர் (49 ஏக்கர்). ஐங்கோண வடிவில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டடம். ஒவ்வொரு மாடி யும் பத்து பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு ஒரு வளையம்போல் வாக்கப்பட்டுள்ளது. ஆரைபோல் அமைந்துள்ள நீண்ட தாழ்வாரம் எல்லா பகுதிகளையும் இணைக்கிறது. இந்தக் கட்டடம் 1943 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. இதைக் கட்டி முடிக்க எட்டு கோடி முப்பது லட்சம் டாலர்கள் செலவாயிற்று (நமது ரூபாய் மதிப்பில் 332 கோடி ரூபாய்கள்),
இக்கட்டத்தின் தனிச் சிறப்பு இங்குள்ள மிகப் பெரிய தொலை பேசி தொடர்பகம்தான். ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தொலைபேசி அழைப்புகள் இதன் மூலம் கையாளப்படுகிறது. இது இங்கு பணிபுரியும் 27000க்கும் மேற்பட்ட ராணுவ, அரசு அலுவலர்களின் தகவல் - தொடர்பு சாதனமாக விளங்குகிறது. செய்திகளை அனுப்பவும் பெறவும் 24 கி.மீ. நீளமுள்ள நியூமாடிக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்குள்ள உணவு விடுதிகளில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 15000 உணவுத் தட்டுகள் பரிமாறப்படுகின்றன.
Post a Comment