மால்ட்டா நிலவறை ரகசியங்கள் !!!!.
மால்ட்டா, மத்திய தரைக் கடலிலுள்ள தீவு நாடு. சிசிலிக்கு தெற்கே 96 கி.மீ. தூரத்திலும் வட ஆப்பிரிக்கா கடற்கரைப் பகுதியிலிருந்து 290 கி.மீ. தூரத்திலும் இது உள்ளது. இந்த நாட்டின் மொத்தப் பரப்பளவே 320 சதுர கிலோ மீட்டர்கள் தான்.
இந்தத் தீவு நாட்டில் கி.மு. 3000 ஆண்டு வாக்கில் சிலர் வந்து குடியேறினார்கள். அப்பகுதிகளில் காணப்படும் வரலாற்றுச் சின்னங்களிலிருந்து அவர்கள் மிகவும் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்தனர் என்று தெரிகிறது. அவர்களுக்குப் பிறகு கி.மு. 1000 ஆம் ஆண்டு வாக்கில் போனீஷியர்கள் வந்து குடியேறினர். இதன் விளைவாக இது வர்த்தக கேந்திரமாகத் திகழ்ந்தது. பின்னர் கார்த்தஜீனியர்கள், ரோமர்கள், பையாத்தியர் ஆதிக்கத்தின் கீழிருந்தது.
இங்கு ஏறக்குறைய 4,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சட்டடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது பார்ப்பதற்கு கோயில்போல் தோற்றம் அளிக்கிறது. இதற்கு 'ஹைபோஜீயம் என்று பெயர். கிரேக்க மொழிச் சொல்லான இதன் பொருள் நிலத்திற்குட கீழே' என்பது அதாவது நிலவறை என்பது. மலைப் பாறையில் கீழே இது கட்டப்பட்டுள்ளது.
ஏராளமான அறைகள் 10 மீட்டர் (33 அடி) ஆழத்தில் கட்டப்பட்டுள்ளன. இந்த அறைகள் வலைப்பின்னல் போல் அமைந்துள்ளன. மால்ட்டாவில் தரைப்பரப்பிற்கு மேலே கட்டப்பட்டுள்ள கோயில்களின் அமைப்பு போலவே இதுவும் உள்ளது. ஏறக்குறைய அந்தக் கோயில்கள் கட்டப்பட்ட காலத்திலேயே இதுவும் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது.
இதில் குறிமேடைக் கருவறை ஒன்றுள்ளது. அந்தக் கருவறையில் ஒரு குழி அந்தக் குழி வாயிலில் ஏதாவது பேசினால் அந்த ஒலி அறை முழுவதும் தெளிவாகக் கேட்கும். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஆண்களின் குரல்கள் மட்டுமே இம் மாதிரி ஒலிபரப்பாகும். பெண்களின் குரல் கேட்கவே கேட்காது.
1902 ஆம் ஆண்டு தொல்பொருளியலார்கள் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளை இங்குள்ள அறை ஒன்றிலிருந்து கண்டெடுத்தனர். முதலில் கோயிலாக இருந்து பின்னர் கல்லறையாக மாறியதா அல்லது கோயிலின் ஒரு பகுதி கல்லறையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.
Post a Comment