ராஷ்டிரபதி பவன் அறியாத தகவல்கள் !!!!.
புதுடில்லி வரலாற்றுப் புகழ் பெற்ற நகர். பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக 1912 ஆம்ஆண்டு முதல் விளங்க ஆரம்பித்தது. நகரமைப்பு 1929 ஆம் ஆண்டுதான் முடிவடைந்தது. அதுவரை அரசு நிர்வாகங்கள் பழைய டில்லியிலிருந்தே நடைபெற்று வந்தது. புது டில்லியில் 'ராஷ்டிரபதி பவன் எனும் ஜனாதிபதி மாளிகை உள்ளது. இங்கிருந்து ஒரு சாலை பழைய டில்லிக்கும். ஒரு சாலை இந்திர பிரஸ்தாவிற்கும், மற்றொரு சாலை பழைய டில்லியிலுள்ள பெரிய மசூதி என்று குறிப்பிடப்படும் பழைய ஜாமா மகுதிக்கும் செல்லுகிறது.
ராஷ்டிரபதி பவன் 1929 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ம ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த மாளிகை. இதில் 340 அறைகள் உள்ளன. விருந்தினர்களை வரவேற்பதற்காக 37 வரவேற்புக் கூடங்கள் தனியாகக் கட்டப்பட்டுள்ளன. தவிர 74 பொதுக்கூடங்களும் கவான் வளைவோடு கூடிய பாதைகளும் இந்த மாளிகையில் இருக்கின்றன. ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள தாழ்வாரமும், 18 மாடிப்படிக்கட்டுகளும், 37 நீர்த்தாரைகளும் இந்த மாளிகையின் தனிச் சிறப்புகளாகும்.
செம்மணற் பாறைக் கற்களினாலும் சலவைக் கல்லினாலும் கட்டப்பட்டது இந்த மாளிகை. இதை முதலில் அரச மாளிகை என்று குறிப்பிட்டு வத்தனர். இதைச் சுற்றி 40 ஏக்கர் பரப்பளவில் மிக அழகான தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரபதி மாளிகைக்கு அருகில் வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ள பாராளுமன்றக் கட்டடம் உள்ளது. இதற்கும் ராஷ்டிரபதி மாளிகைக்குமிடையே இருபுறமும் மரங்கள் அடர்ந்த அகலமான சாலை செல்லுகிறது. சாலையின் இரு பக்கங்களிலும் பசுமையான புல்வெளியும், தடாகங்களும் உள்ளன. இந்த மாளிகைக்கு கிழக்கே சுமார் 1.5 தூரத்தில்தான் புகழ்பெற்ற கனாட் பிளேஸ் எனும் கடைத் தெரு உள்ளது.
Post a Comment