கமுதி கோட்டை விரிவான தகவல்கள் !!!!!.
கமுதி கோட்டை விரிவான தகவல்கள் !!!!!.
கமுதி கோட்டை 17 ம் நூறாண்டில் ராமநாதபுரத்தை ஆட்சி செய்த விஜய ரகுநாத சேதுபதி மன்னரால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொறியாளரால் கட்டப்பட்டது. குண்டாறு ஆற்றங்கரையில் இந்த கோட்டை அமைந்துள்ளதால் கோட்டை மேடு என்றும் அழைக்கப்படுகிறது. ஒன்பது சுற்று கோட்டைகள் மன்னரின் ஆட்சி காலத்தில் இருந்தது என்று கூறப்படுகிறது.
பின்னர் 1827 ஆம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட பெரும்வெள்ளத்தில் எட்டு சுற்று கோட்டைகள் அழிந்துவிட்டது. 1966 ஆம் ஆண்டு தமிழக அரசும், தொல்லியல் துறையும் இதனை புராதன சின்னமாக அறிவித்தது. வட்ட வடிவிலான இந்த கோட்டை இப்போது முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1918 ஆம் ஆண்டு இந்த கோட்டைக்கு அருகில் ஆயுதப்படை வீரர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கோட்டையிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுரங்க பாதை உள்ளது. ஆனால் இப்போது அது சிமெண்ட் கொண்டு மூடப்பட்டுள்ளது. மன்னருக்கு பிறகு வேலு நாச்சியாரும் அவருக்கு பிறகு மருது சகோதரர்களின் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் இங்கு வந்து மறைந்திருந்தாக செவி வழி கூறப்படுகிறது . மேலும் அவருடைய தம்பி ஊமைத்துறையும் இங்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஒன்பது சுற்றுகளாக இருந்த கோட்டை தற்போது ஒரு சுற்று கோட்டை மட்டுமே உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது. இந்த கோட்டைக்கு கமுதி மற்றும் முதுகுளத்தூர் வழியாகவும் வரலாம். இந்த கோட்டைக்கு அருகில் கோட்டை முனி என்ற பிரசித்திபெற்ற முனிஈஸ்வரன் கோவிலும் உள்ளது .
Post a Comment