பொஸிடான் தூண் கோயில் !!!!!.
இத்தாலியில் அலெர்னோ எனுமிடத்திற்கு அருகிலுள்ளது பேயஸ்டம் எனும் பண்டைய கிரேக்கக் குடியிருப்பு. இன்று புராதனச் சின்னமாக விளங்கும் இந்த நகர் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்கர்களால் நிறுவப்பட்டது. கி.மு. 323 ஆம் ஆண்டு வாக்கில் இங்கு ரோமானியர்கள் குடியேறினர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் என்ன காரணத்தினாலோ இப்பகுதி புறக்கணிக்கப்பட்டது. இன்று அடையாளம் காண முடியாதபடி பல கட்டடங்கள் சீர் குலைந்த நிலையிலுள்ளன. இங்கு கிரேக்கக் கட்டடங்களில் புகழ் பெற்றவை கோயில்களே.
பேயஸ்டத்திலுள்ள இடிபாடுகளிடையே மூன்று கோயில்கள் நல்ல நிலையிலுள்ளன. அவற்றில் கிரேக்கர்கள் கடல் கடவுளான பொஸிடானிற்காக எழுப்பப்பட்ட கோயில் ஒன்று. பேயஸ்டர் எனும் நகரே கிரேக்கர்களால் பொஸிடான் என்று அழைக்கப்பட்டது. ரோமர்கள் பொஸிடாளை நெய்டியூன் என்றழைத்தனர்.
இந்த நெப்டியூன் கோயில் கி.மு.140 ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. இக்கோயிலின் கூரையும் உள் சுவர்களும் மட்டும் இடிந்து போய்விட்டன. பிரம்மாண்டமான தூண்களுடன் கூடிய மற்ற பகுதிகள் அப்படியே உள்ளன. இக்கோயில் மிகத் திறமையாக, பார்த்தவர்களைத் தன் வயப்படுத்தும் விதத்தில் கட்டப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மொத்த நீளத்தில் பாதிதான் அதன் அகலம்.
அந்த அகலத்தில் பாதியளவுதான் இதன் உயரம். புடைவரிகள் கொண்ட பிரம்மாண்டமான தூண்களின் போதிகைகள் அரைக்கோள வடிவமுடையவை. அதன் மேல் பரற்கட்டைத் தூலம். அதற்குமேல் ஒப்பனை பட்டை. நம்மூர் கோயில் மண்டபத் தூண்கள் போலத்தான் என்றாலும் இத்தூண்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நம் மண்டபத் தூண்களோ வடிவமைப்பில் ஒன்றுக் கொன்று மாறுபட்டிருக்கும்
திருமணத்திற்கு அதிபதியும் மணமான பெண்களின் காவல் தெய்வமுமான ஹெரா எனும் பெண் கடவுளின் கோயிலும் இங்குள்ளது. ரோமர்கள் ஹெராவை ஜூனோ என்கிறார்கள். விவசாயம், தானியங்களின் அதி தேவதையான செரஸ் எனும் பெண் தெய்வத்தின் கோயிலும் நல்ல நிலையிலுள்ளது. இக்கோயில்கள் கி.மு 550 ஆம் ஆண்டுவாக்கில் கட்டப்பட்டவை
Post a Comment