கேரளாவை போல உணர வைக்கும் கொடிவேரி அணை !!!!!.
கேரளாவை போல உணர வைக்கும் கொடிவேரி அணை !!!!!.
தமிழகத்தில் கேரளாவை போல உணர வைக்கும் அணை உள்ளதென்றால் கண்டிப்பாக கொடிவேரி அணையை கூறியே ஆக வேண்டும் . ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையம் வட்டம் சத்தியமங்கலம் ஊரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.

இதன் வரலாறு என்னவென்றால் இந்த பகுதியின் மன்னரான ஊராளி ஜெயங்கொண்ட சோழ மன்னரால் 1125 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கொடிவேரியில் பாறைகள் இல்லாததால் சத்யமங்கலத்திற்கு அருகில் உள்ள கல்கடம்பூரிலிருந்து பாறைகள் வெட்டி எடுத்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அணையின் கட்டுமான பணிக்காக ஒரிசா, ஆந்திரா,கர்நாடகா ஆகிய ஊர்களில் இருந்த கல் வேலைகளில் பிரபலமான கல் ஒட்டர் சமூகத்தை சேர்ந்த பணியாளர்களை கூட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த அணையை கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனதென்று கூறப்படுகிறது.
அணை முழுவதும் கட்டி முடிக்க பட்ட பிறகு மன்னரின் வருகைக்காக நாள் குறிக்கப்பட்டது. அப்போது வந்த கடும் வெள்ளத்தில் அணை அடித்து செல்லப்பட்டது. இதனை அறிந்த மன்னர் அணையை மீண்டும் சீரமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனை சீரமைக்க ஒன்றரை வருடம் ஆனது. இரண்டாம் முறையாக மன்னர் வரும் நாளன்று வெள்ளம் வந்தது. அந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போயினர். இதனால் மன வேதனை அடைந்த மன்னர் தான் வருவது தன்னுடைய கடவுளுக்கு பிடிக்கவில்லை என்று கருதினார். தனது குடும்பத்தை சேர்ந்த யாரும் அணை திறப்பில் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
மூன்றாவது முறையாக அணை சீரமைக்கபட்டு திறக்கப்பட்டது. அது தான் தற்போது உள்ள கொடிவேரி அணை. இதனுடைய நீளம் 151 மீ அகலம் 30 அடி. இந்த அணையில் குளித்து முடித்தவுடன் மீன்'சாப்பாடும் வெளியில் கிடைக்கும் ஒவ்வொரு மீனிட்கும் ஒவ்வொரு விலை. அணைக்கு மேலே பரிசல் பயணமும் உள்ளது. பரிசல் பயணத்தின் போது கேரளாவிட்கு சென்ற அனுபவம் கிடைக்கும்.
இந்த ஆறு பவானி அணையிலிருந்து வருகிறது .வருடம் முழுவதும் தண்ணீர் நிறைந்திருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. நீங்களும் கொடிவேரி அணைக்கு ஒருமுறை சென்று வாருங்கள் .
Post a Comment