குண்டாங்கல் பாறை !!!!!. - tamilaaa 360

jio

குண்டாங்கல் பாறை !!!!!.

கரூர் மாவட்டம் குளித்தலைக்கு அருகில் சுண்டக்கா பாறை அல்லது குண்டாங்கல் பாறை எனும் இரண்டாவது நூற்றாண்டை சேர்ந்த சிறப்பு வாய்ந்த பாறையாகும்.

Ethirajan Srinivasan on Twitter: "2nd Century AD Rock-Cut ...

30 அடி உயரமுடைய சாய்ந்த நிலையில் காணப்படும் இந்த பாறை அடிப்பகுதியில் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் காணப்படுகிறது.

இந்த பாறையில் சமண சிற்பங்கள் இருப்பதை காண முடிகிறது. இந்த சிற்பங்கள் 4 ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும்.

பாறையின் கீழே சமண படுக்கைகள் இருப்பதை காண முடிகிறது. இந்த படுகைகள் தற்பொழுது பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருப்பது மன வேதனை அளிக்கிறது.

இந்த பாறையின் ஆச்சரியமான நிகழ்வு என்னவென்றால் இந்த பாறை எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் இருப்பதாகும். மேலும் இங்கு வீரபள்ளர் என்ற சமண துறவி வாழ்ந்ததாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. தொல்லியல் துறை இங்குள்ள சிற்பங்கள் 4ம் நூற்றாண்டை சார்ந்து என்று கூறுகிறது.

[இந்த பாறை தற்போது வெட்டப்பட்டு அழிவின் நிலையில் உள்ளது. இதனை காக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். மகாபலிபுரம்  பாறையை போலவே தோற்றம் கொண்ட இந்த பாறையை அனைவரும் சென்று காண வேண்டும்.

கருத்துகள் இல்லை