கைவினைக் கலைஞர்கள் மற்றும் பொம்மைகள் - tamilaaa 360

jio

கைவினைக் கலைஞர்கள் மற்றும் பொம்மைகள்



இன்று நாம் பார்க்கும் அனைத்து கோவில் சிலைகள் முதல் கொழுவில் வைக்கும் பொம்மைகள் வரை அனைத்துமே கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்படுவது. அப்படிப்பட்ட கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் உருவாக்கும் கைவினைப் பொருட்களை பற்றி இந்தப் பகுதியில் காண்போம்.

கைவினைக் கலைஞர்கள் என்றால் யார் தனது கைகளாலேயே சிறுசிறு சட்டி, மண்பானை முதலியவற்றை செய்து கொண்டிருந்தவர்கள் பின்னாளில் நாம் இன்று உபயோகப்படுத்தும் பொம்மைகள் முதல் கோவில் சிலைகள் வரை செய்யத் தொடங்கினர். சிலைகள் செய்வதற்கு முக்கிய ஆதாரமே களிமண்தான். கோவில் கோபுரங்கள் என்னதான் சிமெண்ட் கலவையில் செய்திருந்தாலும் பொம்மைகள் செய்வதற்கு மூல ஆதாரமே களிமண்தான். நாகரீகம் வளர்ந்த இந்த காலத்திலும் கூட மெஷின்கள் மூலம் சிலைகளை செய்வதைவிட தன் கைகளாலேயே பார்த்து பார்த்து ஒரு குழந்தையை  போல சிலையை உருவாக்குவதுதான் அவர்களுக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

 இந்த காலகட்டத்தில் சிலைகள் ஆறு விதமான பொருட்களை கொண்டு செய்யப்படுகின்றது ஆனால் இவற்றிற்கெல்லாம் மூலாதாரம் களிமண் தான். மதுரை மாவட்டத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் இந்த வேலையை செய்கிறார்கள். விரைவில் கைவினைக் கலைஞர்கள் செய்யப்படும் கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மதுரை விளாச்சேரியில் 130க்கும் மேற்பட்ட சிலைகளை செய்யும் கம்பெனிகள் உள்ளன.
 
 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கிறிஸ்தவ சிலைகள் செய்ய அதிக ஆர்டர்கள் வருவதாகவும் அதன் பின்னர் விநாயகர் சிலை மற்றும் கொலு சிலைகள் அதிக அளவில் செய்யப்படுவதாக கூறுகின்றனர். மேலும் இங்கு சினிமா சூட்டிங்களுக்கு தேவையான பொம்மைகள் செய்து தரப்படுகின்றன. தலைவர்களின் சிலை முதல் தனிமனிதரின் சிலைகள் வரை இங்கு செய்யப்படுகின்றது. இங்கு சிலைகள் செய்வது மட்டுமல்லாமல் போக்குவரத்து மற்றும் இதர தொழில்கள் மூலமும் பல குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இங்கு செய்யப்படும் விநாயகர் சிலைகள் 3 அடி முதல் 12 அடி வரை உள்ளதாகவும் 350 கிலோ வரை எடை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் கிராமங்களில் நடத்தப்படும் திருவிழாவிற்கு தேவையான குதிரை பொம்மைகள் இங்கு இவர்கள் கைகளாலேயே யானை சாணம் மற்றும் களிமண்ணை பயன்படுத்தி உருவாக்குகிறார்கள். மேலும் இந்த பொம்மைகள் இறுதியாக சுடப்பட்டு கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை