மதுரை சோமு
மதுரை சோமு என்று அழைக்கப்படும் சோமசுந்தரம் அவர்கள் 1919ஆம் ஆண்டு சச்சிதானந்தம் பிள்ளை மற்றும் கமலாம்பாள் தம்பதியருக்கு பத்தாவது பிள்ளையாக மதுரையில் பிறந்தார். இவருடைய பாட்டனார் பெயர் சுந்தர்ராஜன் பிள்ளை பாட்டியார் பெயர் நாகரத்தினம்மாள்.
இவர் தன்னுடைய இளம் வயதிலேயே இசையை பயின்ற இவர் சேஷ பாகவதர் , அபிராம சாஸ்திரி, சித்தூர் சுப்ரமணிய பிள்ளை இவர்களிடம் இசை பயின்றார். மேலும் இவர் சென்னை பட்டணம் சுப்பிரமணிய ஐயர் அவர்களிடத்தில் 14 ஆண்டுகள் இசை பயின்றார் .
1934ஆம் ஆண்டு தன்னுடைய பதினைந்தாவது வயதில் திருச்செந்தூரில் இவர் பாடிய பாடல் இவருக்கு ஒரு அரங்கேற்றம் ஆக அமைந்தது. தனது இசையின் நுணுக்கத்தால் இவர் 4 ராகங்களான மாதுலிகா, ஓம்காளி, வசீகரி, சோமப்பிரியா உருவாக்கினார்.
இவர் தனது கச்சேரியில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக பாடும் திறன் பெற்றவர் அனைவராலும் அறியப்பட்டது. தெய்வம் திரைப்படத்தில் வரும் மருதமலை மாமணியே முருகைய்யா என்ற பாடலைப் பாடி அனைவரிடமும் புகழ்பெற்றார். இவரது கனத்த குரலாலும் இசையாலும் அனைவரையும் கட்டிப் போட்டார் 70 ஆண்டுகள் வாழ்ந்த இவர் 1989 ஆம் ஆண்டு மறைந்தார்.
Post a Comment