தென்கைலாயம் என்னும் வெள்ளியங்கிரி மலை !!!!!. - tamilaaa 360

jio

தென்கைலாயம் என்னும் வெள்ளியங்கிரி மலை !!!!!.

தென் கைலாயம் என்று அழைக்கக்கூடிய வெள்ளியங்கிரி மலை பகுதிக்கு இன்று நாம் ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருக்கின்றோம்.
வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம் ...
முதல் மலை ஏற தொடங்கியவுடன் படிக்கட்டுகள் செங்குத்தாக இருப்பதை உணர முடிகின்றது மேலும் மேலே செல்ல செல்ல விநாயகர் கோவில் ஒன்று தெரிவதை காணமுடிகின்றது. இதுதான் முதல் மலையின் கடைசி பகுதியாகும். அதன்பின் இரண்டாவது மலை ஏறத் தொடங்கி விடுவோம். 

அதனைத் தொடர்ந்து இரண்டாவது மலை மூங்கில் காடு என்று அழைக்கப்படுகிறது இந்த மலை மிகவும் கரடுமுரடான பாறைகளை கொண்டதாகும். இரண்டாவது மலை ஏறியவுடன் பாம்பாட்டி சித்தர்  தவம் செய்த குகை இருப்பதைக் காணமுடிகின்றது மேலும் மேலே செல்ல செல்ல பாம்பாட்டி சித்தரின் சுனை  இருப்பதையும் காண முடிகின்றது. இந்த மலை தரை மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரம் வரை  காணப்படுகின்றது.

இந்த மலை ஏறுவதற்கு ஐந்து மணி நேரம் ஆகும். ஐந்தாவது மலையை அடைந்தவுடன் பாதை சமதளப் பகுதியாக காணப்படுகிறது. இதில் மூன்று  மலை ஏறும் போது நமக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது உணரமுடிகின்றது. ஆறாவது மலையை அடைந்தவுடன் அங்கு முற்றிலும் பனி சூழ்ந்த பகுதியாக இருப்பதை காண முடிகின்றது. ஆறாவது மலையில் குளித்துவிட்டு ஏழாவது மலைக்கு செல்லலாம் என்று கூறுகிறார்கள். ஆறாவது மலையில் இருந்து ஏழாவது மலை செல்ல ஒரு மணி நேரம் ஆகும். 

ஏழாவது மலை செல்லும் வழியில் இடது பக்கத்தில் தான்தோன்றி பிள்ளையார் கோவில் இருப்பதைக் காணமுடிகின்றது. மற்ற ஆறு மலைகளை விட ஏழாவது மலை மிகவும் கடினமான பாதைகளை கொண்டது. 

ஏழு மலைகளைக் கடந்து சிவனை தரிசிக்கும் பொழுது அந்த ஏழு மலைகளை கடந்து வந்த பாதைகளின் கஷ்டம் நமக்கு தெரியாமல் போகின்றது வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.

கருத்துகள் இல்லை