விக்கிரமங்கலம் சமணர் மலை !!!!!!!.
விக்கிரமங்கலம் சமணர் மலை !!!!!!!.
மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே உள்ளது நடுமுதலைக்குளம். இங்கு சமணர்கள் வாழ்ந்த படுகைகளும் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளது. முந்தைய காலத்தில் மதுரையை சுற்றி நிறைய சமண முனிவர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் இந்த விக்கிரமங்கலம் சமண மலை. இது இரண்டாம் நூற்றாண்டை சார்ந்ததாக கூறப்படுகிறது. ஏறுவதற்கு மிகவும் சிறிய மலையாகும்.

மலைக்கு மேலே செல்லும் போது பாதை மாற கூடாது என்பதற்காக வழியில் அம்புக்குறிகள் போடப்பட்டுள்ளது.இந்த மலை உச்சியை அடைந்த உடன் சமணர் படுகை மற்றும் சுனைக்கு செல்லும் வழிகள் இருப்பதை காணலாம் . முதலில் சமணர் படுகைக்கு சென்றவுடன் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுகளை காண முடிகிறது .அதன் பின்னர் பதினாறு சமண படுகைகளையும் காணமுடியும் .
மேலும் இந்த படுகை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதையும் உணரமுடிகிறது . சமண படுகையை பார்த்துவிட்டு மலையின் மைய பகுதிக்கு சென்றால் சுனை இருப்பதை காணலாம் . இந்த சுனையை தான் முனிவர்கள் பயன்படுத்தினார்கள் என நம்ப படுகிறது . இந்த சமணர் மலை அதிகமாக யாரும் அறிந்திடாத மலையாக உள்ளது. இங்கு தமிழகர்களின் பழமையான பிராமி கல்வெட்டுகளை காணும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இந்த இடம் மதுரையிலுருந்து 26 கிமீ தொலைவிலும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது .மதுரை மாவட்டத்திலிருந்து நடுமுதலைக்குளம் வரை பேருந்து வசதியும் உள்ளது.திண்டுக்கலிருந்து வருபவர்கள் சோழவந்தான் வழியாகவும் வரலாம் .
Post a Comment