ஓதி மலையில் முருக பெருமானை தேடி !!!!!!!!. - tamilaaa 360

jio

ஓதி மலையில் முருக பெருமானை தேடி !!!!!!!!.

ஓதி மலையில் முருக பெருமானை  தேடி  !!!!!!!!.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் .அப்படி  பட்ட ஒரு மலையில் முருகனை காண ஒரு பயணம் .கோயம்புத்தூரிலுருந்து  40 கிமீ தொலைவில் இந்த மலை உள்ளது. 

othimalai - othimalai andavar temple , murugan

கீழே  இருந்து  மேலே செல்ல படி வசதியும் உள்ளது .இந்த மலை முருகனின் அறுபடை  வீடுகளில் ஒன்றான பழனி மலையையும் விட (690) படிகலை விட 1270 படிகலை கொண்ட  மிகப்பெரிய மலையாகும் .இந்த மலை உச்சியில் சென்று பார்த்தால் பவானி சாகர் அணை பகுதி தெரியும் . பாதி  தூரம் சென்றவுடன் விநாயகர்  கோவிலும் அதனை சுற்றி குரங்குகள் வட்ட அடிப்பதையும் காணலாம் .  இந்த கோவிலின் படிகள் மிகவும் செங்குத்தாக இருப்பதால் பெரியவர்கள்  மற்றும் குழந்தைகள் உக்கார்ந்து செல்ல வசதியும் செய்யப்பட்டுள்ளது . 

ஓதி மலை முருகன் அற்புதங்கள் | giriblog

அதில் இருந்து கொஞ்சம் மேலே சென்றவுடன் கோவிலை  அடையலாம் . கோவிலின் உள்ளே சென்றேவுடன்  வலது பக்கம் நாகராஜனும் இடது பக்கம் விநாயகரும் உள்ளனர் . அவர்களை  தாண்டி உள்ளே சென்றதும் இடும்பன்  கோவில் இருப்பதை காணலாம் .

ஸ்தல புராணம் !!!!.

இந்த  கோவிலின் ஸ்தல புராணம் என்னவென்றால்  ப்ரம்மா கைலாய மலை செல்கிறார். அங்கே  விநாயகரை வணங்கி விட்டு முருகனை வணங்காமல் வந்து விடுகிறார். இதனால்  கோபமுற்ற  முருக பெருமான் முருகனை சிறையில் அடைத்து விடுகிறார் .பிரம்மனிடம் பிரணவ மந்திரத்தை கூறும் படி கூறுகிறார் . அதன் பின்னர் முருகனே படைப்பு தொழிலை மேட்கொள்கிறார் . அவர் அனைத்து உயிர்களையும்  மிகவும் நல்ல உயிர்களாக படைத்து விடுகிறார் . இதனால் பாரம் தாங்க முடியாத பூமி தாய் சிவ பெருமானிடம் முறையிடுகிறார் .சிவ பெருமான் முருகனிடம் பிரம்மனை விடுவிக்கும்படி கேட்கிறார் . அதட்கு முருக பெருமான்  பிரணவ மந்திரத்தை கூறும் படி சிவனிடம் கூறுகிறார் . அதன் பின்னர்  சிவ பெருமானுக்கே பிரணவ மந்திரத்தை ஓதுகிறார் .ஆதலால்  இந்த மலை ஓதி மலை என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது .

மேலும் இந்த கோவிலின் நான்கு பக்கங்களிலும் பனிகளால் சூழ்ந்த ஒரு இயற்கை அழகை காண முடியும் .முருகனை தரிசனம் செய்துவிட்டு உள்ளே சென்றால் அம்மன் கோவிலையும் மற்றும் வேண்டுதலுக்காக மரத்தில் கட்டப்பட்ட தொட்டில்களையும் காணலாம். மேலும் இந்த கோவிலுள்ள முருகனின்  சிறப்பு என்னவென்றால் ஐந்து முகங்களையும் எட்டு கரங்களையும் கொண்டுள்ளார் . இந்த  கோவிலில் தான் போகர் சித்தர்க்கு ஐந்து முகங்களுடன் முருகப்பெருமான்  காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை