பாம்பாட்டி சித்தரின் ரகசியங்கள் !!!!!!.
பாம்பாட்டி சித்தரின் ரகசியங்கள் !!!!!!.
பாம்பாட்டி சித்தர் 12 ம் நூற்றாண்டில் கார்த்திகை மாதம் மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் . பாம்புகளை பிடித்து மற்றும் அதன் விஷத்தை எடுக்கும் தொழிலை செய்து வந்தார் . அந்த காலத்தில் அங்கு உள்ள வைத்தியர்கள் இவரிடம் வந்து வைத்தியத்திக்காக நாகமணி வேண்டும் என்று கூறுகின்றனர் .பிறகு அவர் நாகமணியை தேடி தனது பயணத்தை தொடர்கிறார் .

கடைசியாக மருதமலையை வந்தடைகிறார்.அவர் மருதமலையில் நாகமணியை தேடும் போது சட்டைமுனி சித்தரை காண்கிறார் . அவரின் உடம்பில் நாகமணியை போல ஒளி மின்னுகிறது அதனை கண்ட இவர் உங்கள் உடம்பில் எப்படி இப்படி ஒளி மின்னுகிறது என்று கேட்கிறார் .அதட்கு அவர் நீ எதனை தேடி அலைகிறாய் என்று கேட்கிறார் . அதட்கு தான் நாகமணியை தேடி வந்திருப்பாதக கூறுகிறார் .
அதனை கேட்ட சட்டைமுனி உனக்குள்ளயே பாம்பு இருக்கிறதே அதனை வெளி உலகில் ஏன் தேடுகிறாய் என்று கேட்கிறார் . சித்தனாக வேண்டிய நீ ஏன் பித்தன் போல் அலைகிறாய் என்று பாம்பாட்டியை பார்த்து கூறுகிறார் . பிறகு பாம்பாட்டி சித்தர் சட்டைமுனி சித்தரிடம் நிறைய போதனைகள் பெறுகிறார். கடும் தவம் மேட்கொள்கிறார். இறுதியாக குண்டலினி கற்று கொண்டு அதிலும் தேர்ச்சி பெற்றுவிடுகிறார் . சட்டைமுனி சித்தரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு மருதமலையில் சுற்றி திரிகிறார்.
அப்போது ஒரு நாளில் முருகன்பெருமான் பாம்பாட்டி சித்தர்க்கு காட்சி தருகிறார் . இந்த மருதமலையின் ஸ்தல மரமான மருத மரத்தின் பாலை மூல மருந்தாக பயன்படுத்தி மக்கள் பிணியை போக்குமாறு கூறுகிறார் . அவரும் அதன் படியே மக்களுக்கு மருத மலையிலே தங்கி சேவை செய்கிறார் . இன்றும் மருத மலையில் பாம்பாட்டி சித்தர் தவம் செய்த குகையை காணலாம்.
பாம்பாட்டி சித்தரின் சித்தாந்தம் என்னவென்றால் ஒவ்வொரு உயிர்களும் கடவுள் ஒவ்வொரு உயிர்க்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார் . மொத்தமாக 129 பாடல்களை பாடியுள்ளார் . மேலும் இவர் சந்திர ஆருடம்,பாம்பாட்டி சித்தர் வைத்திய சாஸ்திரம் , பாம்பாட்டி சித்தர் பாடல்கள் போன்ற மூன்று நூல்களை இயற்றியுள்ளார் .
Post a Comment